டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கீங்க? மாணவர்களிடம் கேட்ட மோடி

Modi Tiruchirappalli: Modi Tiruchirappalli: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களை பார்த்து டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கிறீர்கள் என கேட்டார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 2, 2024, 11:46 AM IST
  • திருச்சி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி
  • டெல்லி மாணவர்களை பிரத்யேகமாக கேட்ட பிரதமர்
  • 33 மாணவர்களுக்கு பட்டமளித்து கவுரவித்தார்
டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கீங்க? மாணவர்களிடம் கேட்ட மோடி title=

பிரதமர் மோடி திருச்சி வந்துள்ளார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் ஒருபகுதியாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் பாரதிதாசன் கல்லூரிக்கு சென்ற அவரை பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சில இடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தியதை காரில் இருந்தவாறே பிரதமர் மோடி கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க | திருச்சி வந்த பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!

இதனையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பட்டம் பெற்றுக் கொள்ள இருந்த மாணவர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, அவர்களில் யாரெல்லாம் டெல்லியில் இருந்து வந்திருக்கிறீர்கள் என கேட்டார். இதனைகேட்டதும் டெல்லியில் இருந்து வந்த மாணவர்கள் கைதூக்கி காண்பித்தனர். 

பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து பாடல்களுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியது. 33 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்கி கவுரவித்தார். பல்கலைக்கழக துணை வேந்தர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார். பட்டம் பெறும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.  பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களே நோட் பண்ணிக்கோங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News