சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டசபைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
சசிகலா வரும் பிப்ரவரி 9-ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதல்வரை மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றார். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது மக்களின் மனநிலைக்கு எதிரான செயல் என்றார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசிய தீபா:-
என்னை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. தமிழக மக்களின் சுதந்திரம் இழந்ததுபோல் ஒரு சூழல் தற்போது உருவாகி உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும்.
இதில் மக்களுக்கு எந்த வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் ஆட்சி செய்யலாம்.
புரட்சி தலைவி ஜெயலலிதா என்ற பெயர் அழிந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை. உங்களுக்காக நான் தொடர்ந்து பணி செய்வேன்.
ஜெயலலிதாவின் நிழலைக்கூட யாரும் தொட முடியாது. அதற்கு நானும் விடமாட்டேன். ஜனநாயகம், மக்களாட்சி மலரவேண்டும் என்பதற்காக நான் துணை நிற்பேன்.
பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் ஆட்சி செய்யலாம்.
ஜெயலலிதாவின் நிழலைக்கூட யாரும் தொட முடியாது. அதற்கு நானும் விடமாட்டேன். ஜனநாயகம், மக்களாட்சி மலரவேண்டும் என்பதற்காக நான் துணை நிற்பேன் என்று தீபா கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தீபா சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சசிகலாவிற்கு எதிராக மக்களை திரட்டப் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.