#MLAsForSale: இந்திய அளவில் டிரெண்ட்

Last Updated : Jun 13, 2017, 09:36 AM IST
#MLAsForSale: இந்திய அளவில் டிரெண்ட் title=

அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி தர சசிகலா குடும்பத்தினர் முன்வந்ததாக எம்.எல்.ஏ., கூறும் வீடியோ தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. 

இதனை தொடர்ந்து #MLAsForSale எனும் ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு 6 கோடி ரூபாய் தர, சசிகலா குடும்பத்தினர் முன் வந்ததாக, அ.தி.மு.க., - மதுரை வடக்கு, எம்.எல்.ஏ., சரவணன் கூறும், வீடியோ காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அது நாடு முழுவதும், பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்ட அந்த வீடியோ வைரலாக பரவியது. டுவிட்டரில் #MLAsForSale எனும் ஹேஷ்டாக்கில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. 

Trending News