இனி ரூ.1000 இல்லை... உயரும் கலைஞர் உரிமைத்தொகை - பட்ஜெட்டில் வருது அறிவிப்பு?

Kalaignar Magalir Urimai Thogai: தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் தற்போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் பட்ஜெட்டில் அந்த தொகையை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதில் தொகையை அதிகரிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

1 /8

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 

2 /8

ஒன்றிய அரசால் சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் குடும்பங்களுக்கு செலவுகள் அதிகமாகியுள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் வகையில், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும் என 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது

3 /8

தகுதிவாய்ந்த மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. தற்போது அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பயனாளர்கள் நீக்கப்பட்டு, தற்போது மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சமாக குறைந்தது. 

4 /8

நாட்டில் முதல்முறையாக மகளிருக்கு உரிமைத் தொகை தமிழ்நாட்டில்தான் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை தொடர்ந்து மத்திய பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கர்நாடகாவில் ரூ.2000 குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

5 /8

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டுக்கு பின் உதவித்தொகையை அறிவித்த மாநிலங்களில் அதிக தொகையை அறிவித்துள்ளதால், தமிழ்நாடும் தொகையை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

6 /8

வரும் 2025-26 பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000 இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதா கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

7 /8

புதிய ரேஷன் கார்டை பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களில் மேற்முறையீடு செய்தவர்கள் ஆகியோரும் வரும் காலங்களில் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். இதனால் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

8 /8

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரும் என்பதால் 2025ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பிலேயே இந்த தொகை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.