சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைவெளியிட்டுள்ளார், அது என்னவென்றால்:-
வார்தா புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட வருவதன் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், மத்திய குழுவினர், வார்தா புயலால் சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும்.
#Vardah சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும் pic.twitter.com/LGu4hIxVN7
— M.K.Stalin (@mkstalin) December 27, 2016
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தாத நிலை ஏற்பட்டு உச்சநீதிமன்றமே ஆணையிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் நியமிக்கப்படாமல் போய் விட்டது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக அனுப்பப்பட்ட மத்திய குழுவை அ.தி.மு.க. அரசு பயன்படுத்தாமல் கோட்டை விட்டது.
வார்தா புயலால் ஏற்பட்ட முழு சேதத்தையும் சீரமைக்கும் வகையில் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.