யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் ஓமம்: இப்படி உட்கொண்டால் அதிக பயன்

Ajwain To Control Uric Acid: இன்றைய காலக்கட்டத்தில், முதியவராக இருந்தாலும் சரி, சிறியவராக இருந்தாலும் சரி, அனைவரும் பல வாழ்க்கைமுறை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2024, 09:27 PM IST
  • அசிடிட்டி, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள், வாயுத்தொல்லை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமம் பயனுள்ளதாக இருக்கும்.
  • - இது ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • - இவை பல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும் ஓமம்: இப்படி உட்கொண்டால் அதிக பயன் title=

Ajwain To Control Uric Acid: ஓமம் நம் இந்திய சமையலறைகளில் காணப்படும் ஒரு மசாலா ஆகும். இது உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாம்மல் இது உடல் ஆரொக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. பொதுவாக ஓமத்தின் சுவை கசப்பாக இருக்கும். ஆனால் இதை சாப்பிடுவதன் மூலம் பல ஆபத்தான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

இன்றைய காலக்கட்டத்தில், முதியவராக இருந்தாலும் சரி, சிறியவராக இருந்தாலும் சரி, அனைவரும் பல வாழ்க்கைமுறை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் யூரிக் அமில நோயும் ஒன்று. பலருக்கு யூரிக் அமில அளவு உடலில் அதிகமாக இருக்கின்றது. இதனால் மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை ஆட்கொள்கின்றன. 

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த பல வீட்டு வைத்தியங்கள் பயன்படுகின்றன. அவற்றில் ஓமமும் ஒன்று. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அதிகரித்த யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும். ஓமம் கொண்டு யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | வயசானாலும் அழகு குறையாமல் இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்

ஓமத்தில் உள்ள ஆரோக்கய நன்மைகள்:

- ஓமத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற தாதுக்கள் உள்ளன.
- மேலும் இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
- இவை யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 
- செலரியில் உள்ள குறிப்பிடத்தக்க சேர்மங்களான லுடோலின், 3-என்-பியூட்டில்ப்தாலைடு மற்றும் பீட்டா-செலினின் ஆகியவை இரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்கின்றன.
- மேலும் இவை கீல்வாதத் தாக்குதல்களைத் தூண்டும் அழற்சி நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைக் குறைக்கின்றன.

யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் ஓம நீர் குடிப்பது நல்லது. தூங்கும் முன் ஒரு ஸ்பூன் செலரி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இது தவிர ஓமத்தை இஞ்சியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இந்த இரண்டு வழிகளும் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும். 

ஓமம் உட்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகள்:

- அசிடிட்டி, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள், வாயுத்தொல்லை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமம் பயனுள்ளதாக இருக்கும். 
- இது ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது.
- இவை பல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. 
- மூட்டு வலியால் அவதியில் உள்ளவர்களுக்கு ஓமம் மிக பயனுள்ளதாக இருக்கும். 
- இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு கூறுகள் கீல்வாதம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன.
- ஓமத்தில் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் உள்ளன.
- இந்த ஆன்டி-பாக்டீரியல் கூறுகள் சளி மற்றும் இருமல் போன்ற வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ரத்த நாளங்களில் இருக்கும் கொலஸ்ட்ராலை... இந்த 5 பழங்கள் கரைத்துவிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News