பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் இவையனைத்தும் கட்டாயம் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எப்படிச் சமாளிப்பது என்பதை நீங்கள் சொல்லி வளர்க்க வேண்டும். முக்கியமாகக் குழந்தைகளிடம் எப்படி நட்பாக இருக்க வேண்டும் என்பதை இங்குப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வளரும் பிள்ளைகளுக்குத் தேவையானதைச் செய்வது பெற்றோர்களின் கடைமை. அதேபோன்று குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், பண்புகள் மற்றும் மரியாதை படிப்பைவிடப் பல மடங்கு அவசியம். குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் இருந்தால் அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த முடியும். கவனசிதறல் ஏற்படாது. பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பியதும் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். உறவுகள் மேம்பட நேரம் ஒதுக்குதல் நல்ல உறவுகளுக்கு வழிவகுக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உறவு மற்றும் சிறந்த பண்பு வழுவாக இருக்க இந்த விஷயங்கள் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் இந்த விஷயங்கள் இங்குப் படித்துவிட்டு குழந்தைகளிடம் இவையனைத்தும் கற்றுக்கொடுக்கத் தொடங்குங்கள்..
பொதுவாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பெரிதாகப் பேசுவதும் இல்லை, நண்பர் போல் பழகுவதும் இல்லை. அனைத்து பெற்றோர்களும் செய்யும் மிகப்பெரிய தவறு இது.
ஒரு குழந்தை மனதில் தோன்றுவது பெற்றோரிடம் நட்புடன் பழக வேண்டும் என்ற சிறிய ஆசை அவர்களிடம் உள்ளது. சில பெற்றோர்கள் குழந்தைகளின் ஆசைகளுக்கு இடம் அளிப்பதில்லை. இதனால் குழந்தைகள் பெரிதும் மன உலைச்சலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பெற்றோர்கள் கட்டாயம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையானதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் நல்ல முறையில் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லி வளர்க்க வேண்டும்.
சில பெற்றோர்கள் கூறுவது, எதற்கு இப்போதே குழந்தைகளுக்கு இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும் ? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால் குழந்தைகள் இன்றைய காலசூழ்நிலையைக் கற்பது மிகவும் அவசியமாகிவிட்டது. மேலும் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்படி கற்றுக்கொடுக்க வேண்டும்.
சிறு குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தவர்கள், குழந்தைகளுக்கு எது நல்ல பழக்கங்கள் எது தீய பழக்கங்கள் என்று சொல்லி வளர்க்க வேண்டும். சக மனிதர்களிடம் எப்படிப் பேச வேண்டும், நம்மில் மூத்தோர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் மற்றும் அடுத்தவர் கூறும் கருத்துகளை எப்படிக் கவனிப்பது போன்றவை கற்றுக்கொடுத்தல் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
குழந்தைகளை முதலில் பேச விடுங்கள், குழந்தை மனதில் இருக்கும் ஏதோ ஒரு உணர்வு உங்களிடம் பகிர வைக்கவும் அதற்குப் பெற்றோர்கள் நட்பாகப் பழக வேண்டும். பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளை முன்னே நடக்கவிட்டுப் பெற்றோர்கள் பின்னே செல்வது நன்று.
குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம் பெற்றோர்களின் மனதில் தோன்ற வேண்டாம். குழந்தைகள் சிறிய கஷ்டங்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்று உற்று நோக்கிப் பார்க்க வேண்டும். குழந்தைகள் கஷ்டங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள், அதே சமயம் திறன்களை எளிதில் கற்கும் சக்தி குழந்தைகளுக்கு உண்டு.
குழந்தைகள் பள்ளி அல்லது நண்பர்களிடம் ஏதாவது மனக்கசப்பு இருந்தால் அதை எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். குழந்தைகளிடம் இருக்கும் கஷ்டங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பகிரும்படி சொல்லி வளர்க்க வேண்டும்.