மாநிலங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா...

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணா அவர்களின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

Last Updated : Feb 3, 2019, 11:48 AM IST
மாநிலங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா... title=

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணா அவர்களின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு அண்ணா சதுக்கம் சென்றடைந்தனர். 

பின்னர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இந்நிகழ்வின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவர்கள், மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக, அண்ணா அவர்களின் 50-வது நினைவு தினம் அன்று அவரை நினைவுகூறும் வகையில் "அண்ணாவையும், அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும்" என கழக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு கடந்தாலும்  என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இணையிலா எழுத்தாலும், ஈர்த்திடும் பேச்சாலும் அயராத உழைப்பாலும் , ஆளுமையாலும் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வை  ஊட்டியவர் அண்ணா என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் அண்ணா என்றும் அண்ணாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Trending News