தமிழக அரசிடம் மட்டும் நிதி இருந்து இருந்தால்... எம்எல்ஏ பேச்சு!

தமிழக அரசிடம் நிதி இல்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமப்படுகிறது என கும்பகோணத்தில் எம்எல்ஏ பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2022, 01:01 PM IST
  • தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை.
  • நிதி இருந்தால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்போம்.
  • கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பேச்சு.
தமிழக அரசிடம் மட்டும் நிதி இருந்து இருந்தால்... எம்எல்ஏ பேச்சு! title=

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 50 நியாய விலை கடைகள் அனைத்தும் படிப்படியாக மாநகராட்சியின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என மாநகர துணை மேயர் தமிழழகன் தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கும்பகோணம் 13 வது வார்டு  நியாய விலை கடை இன்று திறக்கப்பட்டது.  கும்பகோணம் நகராட்சியாக இருந்த போது 45 வார்டுகள் இயங்கின. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் இதன் எண்ணிககை 50 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க | திமுகவின் ஏ ராஜாவுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

kumbakonam

இந்த 50 வார்டுகளுக்கும் தனித்தனி நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டன.  வாடகை கட்டிடங்களில் இயங்கிய இக்கடைகளுக்கு தற்போது மாநகராட்சியின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் புதிதாக நியாய விலைக் கடைகள் கட்டப்பட்டு வருகிறது.  படிப்படியாக கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என இத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை மேயர் தமிழழகன் தெரிவித்தார்.

anbalagan

மேலும் இவ்விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கா அன்பழகன் தமிழக அரசிடம் நிதி இல்லாமல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமப்படுகிறது. மேலும் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.  புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திறந்து வைத்தார்.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News