குளம் மற்றும் கிணற்றை காணவில்லை! வித்தியாசமான முறையில் போராட்டம்!

குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 16, 2023, 12:59 PM IST
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போராட்டம்.
  • நீர்நிலைகளை பாதுகாக்க சமூக ஆர்வலர் போராட்டம்.
  • தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குளம் மற்றும் கிணற்றை காணவில்லை! வித்தியாசமான முறையில் போராட்டம்! title=

குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.  புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், இவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி 2017 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கணேசன் இடம் புகார் அளித்தார்.  இதுகுறித்து அப்போது கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால் 2017 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா! பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்

இதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை 12 வாரத்துக்குள் அந்த குளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது.  12 வார கால அவகாசம் முடிந்த பின்னரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார்.  இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இவர் சென்று நேரில் கேள்வி கேட்கும் போது இரண்டு ஆண்டு காலம் தடை அவகாசம் பெற்று இருப்பதாக கூறி உள்ளனர்.  

viralimalai

மீண்டும் தகவல் அறியும் சட்டத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.  அதற்குப் பின்னர் தான் தெரிய வருகிறது அந்த கால அவகாசம் இரண்டு வாரங்கள் மட்டுமே என்று இரண்டு ஆண்டுகள் இல்லை என்பது தெரியவந்தது.  மக்களையும் நீதிகளையும் ஏமாற்றுவதாக வேதனை தெரிவித்தார்.  சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்வதாக கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து இலுப்பூர் தீயணைப்பு துறையினர் மேல்நிலைப்பள்ளி இருந்த காந்தியவாதியான செல்வராஜை பத்திரமாக மீட்டனர்.

மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்.28 வரை அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News