அண்ணாமலை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அமைச்சர் மனோதங்கராஜ் சவால்

பீகாரை விட தமிழ்நாடு முன்னேற்றத்தில் பின்தங்கியிருப்பதாக கூறும் அண்ணாமலை இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2024, 06:37 AM IST
  • பீகார் முன்னேறி இருக்கிறதா?
  • அண்ணாமலை பேசுவது பொய்
  • நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?
அண்ணாமலை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அமைச்சர் மனோதங்கராஜ் சவால் title=

பீகாரை விட தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கி உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், இது குறித்து தைரியம் இருந்தால் நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா? என அமைச்சர் மனோதங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் ஒரு மலைவாழ் பகுதியை கூட உதாரணமாக வைத்து விவாதிக்க தயார் என்றும் அவர் சவால் விட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தாலுக்காவுக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகளை துவங்கி வைத்த தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குழித்துறை பகுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, பீகாரை விட  தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்டங்கள் மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கி உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். 

மேலும்படிக்க | விஜய் தொடங்கிய கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்: அமைச்சர் முத்துசாமி

அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் மக்கள் பொருளாதார முன்னேற்ற அறிக்கை வைத்து தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து,  என்னோடு பொது மேடையில் விவாதிக்க தைரியம் உள்ளதா? என கேட்டார். அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

மனித வள மேம்பாட்டு குறியிட்டில் தமிழகத்தை ஒப்பிட பாஜக ஆளும் மாநிலத்திற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் கூறினார். குமரியில் மீனவ மக்களின் கோரிக்கையை மதிக்கிறேன். எல்லோரும் அவர்கள் பிரதிநிதிகள் வர வேண்டும் என்று விரும்பு கின்றனர். தேர்தல் என்பது மதத்தை வைத்து நடைபெறுவது அல்ல, அது தேசத்தின் நலம் சார்ந்து நடக்க கூடிய ஒன்று. அந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவின் ஒட்டு மொத்த சவாலாக, வளர்ச்சிக்கு ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்பது தான் படித்த மாவட்ட மக்களின் ஒரே இலக்க்காக உள்ளது. இந்திய கூட்டணி வேட்பாளர் 100 சதவிகிதம் வெற்றி பெறுவார்கள் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 

மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News