‘திருமணத்திற்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க’: நண்பர்கள் வைத்த பேனர்

காஞ்சிபுரத்தை அடுத்த தூசியில் நடைபெற்ற திருமணத்திற்காக பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது என வித்தியாசமாக பேனர் வைத்த அனைவரையும் கவர்ந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2022, 08:20 PM IST
  • காதலித்த பெண்ணை கரம் பிடித்த இளைஞருக்கு வித்தியாச பேனர் வைத்த நண்பர்கள்.
  • வித்தியாசமான பேனர் சமூகவளைதளங்களில் வைரல்.
  • திருமணத்திற்கு வாங்க, அடுத்த மாப்பிளை நாங்க, பொண்ணு இருந்த தாங்க என டிவிஸ்ட் வைத்த நண்பர்கள்.
‘திருமணத்திற்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க’: நண்பர்கள் வைத்த பேனர் title=

காஞ்சிபுரத்தை அடுத்த தூசி பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா.பட்டதாரி இளைஞரான இவர் காஞ்சிபுரத்திலுள்ள ஓர் தனியார் பட்டு ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த ஊரிலிருந்து காஞ்சிபுரம் வந்து செல்லும் இவர் கடந்த 2வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த ரேணுகா என்பவருடன் நட்புறவு ஏற்பட்டு பின்னர்  இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.இந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமானது காஞ்சிபுரத்தை அடுத்த தூசி பகுதியிலுள்ள ஓர்‌ தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்கென மாப்பிள்ளை பூபதி ராஜாவின் நண்பர்கள் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் வாலிபர் கைது என்று கொட்டை எழுத்தில் வைக்கப்பட்ட அதில் குற்றம் - பெண்ணின் மனதை திருடிவிட்டார் என்றும் அதற்கான தீர்பாக மூன்று முடிச்சு போடுதல் என்றும் கைது செய்யும் நாள்,கைது செய்யும் நாள் எனவும் குறிப்பிடப்பட்டு அதற்கான சாட்சிகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வித்தியசமாக வைத்த இருந்தது.மேலும் அதில் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக திருமண வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்த தாங்க எனும் எழுத்துகளும் அச்சிடப்பட்டு டிவிஸ்ட் வைத்தும் பேனரில் இடபெற்றிருந்தது.

மேலும் படிக்க | Viral News: அணிலுக்கு CPR சிகிச்சை அளித்து மறு உயிர் கொடுத்த மின்வாரிய ஊழியர்கள்!

திருமணத்திற்கு வருகைதந்தவர்கள் வித்தியாசமாகவும், சிரிப்பூட்டும் வகையில் இருந்த இந்த பேனரை உற்று பார்த்தோடு சிலர் சிரித்து சென்ற நிலையில் பெண் பிள்ளை உள்ளவர்கள் வாயடைத்து போய் முனுமுனுத்தவாரும் சென்றனர். தற்போது இந்த திருமண வரவேற்பு பேனர் புகைப்படங்கள் சமூக வளைதளங்கல் வைரலாகி வருகிறது. திருமணத்திற்காக பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது என வித்தியாசமாக பேனர் வைத்த அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | உண்மை காதலுக்கு வயதில்லை... 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன்!

மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News