Mansoor Alikhan: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய ஜனநாயகம் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூர் மாவட்டம் வேலூரில் லாங்கு பஜார் பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். இந்த பிரச்சாரத்தின் பொழுது அங்குள்ள வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார், மேலும் இவர் வந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் அவருடன் இணைந்து தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணா கலையரங்கம் அருகே உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, வேலூரில் களம் காண்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சென்னைக்கு அருகாமையில் இருப்பதாலும் நான் இங்கேயே வீடு எடுத்து தங்கலாம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. பாலாறு பிரச்சனை பாலாற்றில் உள்ள மணல்களை காலியாகி விட்டனர், மது கஞ்சா உள்ளிட்ட போதல் பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனைப் பொது அஜெண்ட் வாக வைத்து களம் காண்கின்றேன், பெரிய கட்சிகள் நிற்கின்றன பல்லாயிரம் கோடியை செலவழிப்பார்கள் மாற்றம் வேண்டும் என்பதற்காக எனக்கு மக்கள் உதவுவார்கள் என்ற பலத்தில் நிற்கிறேன்.
கட்சியிலிருந்து உங்களை நீக்கி விட்டதாக ஒரு செய்தி பரவுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுச் செயலாளருக்கு நின்றேன் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேலை இல்லை, அதற்கான அவசியமும் இல்லை. பொதுச் செயலாளராக பாலமுருகன் என்பவர் உள்ளார், அதற்கு மேல் நான் ஏதும் கூற விரும்பவில்லை கட்சியில் அவர் ஒரு மாதமாக தான் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு நோக்கத்தோடு அவரை அனுப்பி உள்ளனர். நான் பழம் தின்னு கொட்டை போட்டவன், எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அவருக்கு ஏதாவது கட்சியினர் பணம் கொடுத்து இது போல் பேச சொல்லி மற்ற கட்சியினர் பணம் கொடுத்திருந்தால் எனக்கு சந்தோஷம்தான்.
கதிர் ஆனந்த் மற்றும் ஏ.சி.எஸ் ஆகியோர் வேலூரில் பலம் பொருந்தியவர்கள் களம் காணுகின்றனர். இந்த தேர்தலை நீங்கள் பொதுமக்களிடம் எந்தவிதத்தில் கையாளுவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரிய பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் அவர்களை வீழ்த்த நான் எளிமையை கையாள போகிறேன். கண்டிப்பாக நான் வீழ்த்துவேன், அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அவர்கள் லட்சம் லட்சமாக மக்களுக்கு பணம் கொடுக்கலாம். அதனால் மக்கள் பயனடையலாம், அவர்கள் பிணவறையில் பணத்தை அடக்கி வைத்து விட்டு வருபவர்கள்.
அவர்கள் பெரியார் அண்ணா போன்ற தலைவர்களை முன்னிறுத்துகின்றனர், ஆனால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரிய கோடீஸ்வரர்களாக உலகப் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். நான் எளியவர்களுக்கான ஆட்சியை உருவாக்க வந்துள்ளேன் மக்களுக்கான உழைப்பாளியாக நான் இருப்பேன் நான் பாராளுமன்றத்தில் மக்களுக்காக போராட முடியும் அவர்கள் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். கண்டிப்பாக காட்டன் சூதாட்டத்தை மது மற்றும் கஞ்சா ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பேன் வேலையில்லா இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் எனக் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ