நாட்டை தீர்மானிக்கின்ற முடிவு உங்கள் கையில்... வாக்களித்த விஜய் சேதுபதி

நான் ஓட்டுப்போட்டேன்.. அனைவரும் ஓட்டு போடவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2019, 01:22 PM IST
நாட்டை தீர்மானிக்கின்ற முடிவு உங்கள் கையில்... வாக்களித்த விஜய் சேதுபதி title=

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக  தலைமையில் மற்றொரு அணியும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். 

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காலை முதலே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், சமூக சேவகர்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

அந்த வகையில், தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கார்பரேஷன் காலனியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை தீர்மானிக்கின்ற முடிவை உங்களிடம் உள்ளது. அதனால் அனைவரும் ஓட்டு போடவேண்டும், நானும் ஓட்டுப்போட்டேன். உங்களை போன்று நானும் நல்ல முடிவுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் எனக் கூறினார்.

Trending News