ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 1, 2022, 11:04 AM IST
  • 4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையவர்
  • பழிக்குப்பழியாக அரங்கேறிய பயங்கரம் ? - விசாரணை
  • கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை
ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை  title=

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் சக்திவேல். 37 வயதான இவர்மீது கொலை,கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் தலையை வெட்டி, கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக 2021ல் கைதாகி சிறைக்கு சென்றார். பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை மத்திய சிறையில் இருந்து சோழவந்தான் வழியாக தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

 Crime,murder,madurai,gundar sakthivel,bail,ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். மேலக்கால் அரசு பள்ளி அருகே வந்தபோது குண்டார் சக்திவேலை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து போனது. மர்ம நபர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் குண்டார் சக்திவேலை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். அதில் நிலைகுலைந்து போன சக்திவேல், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடிக்க உயிரிழந்தார். 

 Crime,murder,madurai,gundar sakthivel,bail,ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடுபட்டி போலீசார் சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். தடயவியல் வல்லுநர்களும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர், கொலை செய்யப்பட்ட சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சக்திவேல் 4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் பழிக்கு பழியாக திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | மகன் செய்த பாலியல் வன்கொடுமைகளின் ஆதாரங்களை அழித்த அப்பாவுக்கும் தண்டனை

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதனால் இப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

மேலும் படிக்க | சென்னையில் பள்ளி மாணவிகளை டேட்டிங் அழைத்துச்சென்று சில்மிஷம்... ஆரசு பள்ளி ஆசிரியரின் கைவரிசை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News