’ஓவர் டைம்ல மது விற்பனை செய்றாங்க’ சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்யும் கிளப்கள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2023, 08:49 PM IST
  • மது விற்பனை தாறுமாறாக இருப்பதாக புகார்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
  • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
’ஓவர் டைம்ல மது விற்பனை செய்றாங்க’ சென்னை நீதிமன்றத்தில் வழக்கு  title=

தமிழ்நாடு முழுவதும் நேரம் காலம் இல்லாமல் மதுபானங்கள் கிடைப்பதாக கடும் சர்ச்சைகள் எழுந்திருகிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்யும் கிளப்கள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டை மாற்றும் திமுக...? பதுக்கல் குறித்து பாஜக குற்றச்சாட்டு

தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்க உரிமம் பெற்ற கிளப்கள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் மது விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர், உயர் நீதிமன்றத்தில் அந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கிளப்கள், ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்கள் வழங்கப்படுவதாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்றுள்ள இந்த கிளப்கள், ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்துவதுடன், விதிமீறும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புகழேந்தி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News