முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மற்றொரு தரப்பு வழக்கறிஞர்கள் சட்ட பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டதால் இரு தரப்பு வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் சட்ட மாற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள 3 சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்படு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முப்பெரும் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில்., முப்பெரும் சட்டங்கள் குறித்து அந்தந்த மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களுக்கும் மற்றும் மாநில காவல்துறைக்கும் முறையாக அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கத்தினர் மத்திய அரசின் முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று முதல் ஜூலை 8-தேதி முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர் திருத்தங்களை செய்ததை உடனே நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்... சில முக்கிய அம்சங்கள் விபரம்..!!
இந்நிலையில் முப்பெரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கம் போல் தங்களது பணிக்கு செல்வதாக கூறி சில வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக 3 சட்ட திருத்த பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆதரவு, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரும் கலைந்துசென்றாலும், மீண்டும் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய நிலையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
முப்பெரும் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாக்குவாதம் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ