Gold / Silver Rates Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!!

கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2021, 10:56 AM IST
Gold / Silver Rates Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!! title=

Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். 

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ( 22 கேரட்) ஒரு கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 44,970 ஆக அதிகரித்துள்ளது. 24 காரட்  தங்கம் 

24 காரட் தூய தங்கத்தின் விலை இன்று  ரூ.10 அதிகரித்து ரூ.49,060 ரூபாயில் விற்பனையில் செய்யப்படுகிறது. 
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.69,600 என்ற அளவில் விற்பனையாகிறது. 

ALSO READ: Gold Rate Today: தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு, ஒரே நாளில் ரூ.32 குறைந்தது தங்கம்

தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,660  ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,910 ஆகவும் உள்ளது.

கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 47,010 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம்  49,710 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.  மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,410 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.49,410 ஆகவும் விற்பனையில் உள்ளது. 

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.

ALSO READ: Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News