ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய கேள்வியை... என்னிடம் கேட்கிறீர்கள்: கனிமொழி பளிச்

மக்களவை தேர்தலில் யார்? எங்கு போட்டியிட வேண்டும் என திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2019, 02:26 PM IST
ஸ்டாலினிடம் கேட்க வேண்டிய கேள்வியை... என்னிடம் கேட்கிறீர்கள்: கனிமொழி பளிச் title=

மக்களவை தேர்தலில் யார்? எங்கு போட்டியிட வேண்டும் என திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

நேற்று தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக ராஜயசபா எம்.பி. கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திமுக நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு வருவதால், வரும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் "ஊராட்சி சபை கூட்டம்" மூலம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு, திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனால் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அதேபோல எனக்கு தூத்துக்குடி பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதனால் இங்கு வந்து தூத்துக்குடி மாவட்ட மக்களை வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். 

திமுக சார்பில் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிட போவதாக கூறப்படுவது என்பது திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்யப்பட வேண்டும். எங்கள் கட்சியின் தலைவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது பற்றி கட்சியின் தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என  ராஜயசபா எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

Trending News