நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், இந்துதீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது மனம் பதறுகிறது என்று குறிப்பபிட்டுருந்தார். அதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார் . .
கமல் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்தில்; என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என்று கூறி இருந்தார். அதற்கு காரணம் சிறுவன் ஒருவன் கமல்ஹாசனின் படத்தை பின்னால் இருந்து ஒருவர் சொல்ல அதனை கேட்டு கமலின் படத்தை கத்தியால் குத்தி கிழிப்பது போல அந்த வீடியோ பதிவு இருந்தது.
இந்நிலையில் எச். ராஜா கமலுக்கு பதிலடி குடுக்கும் விதமாக; எந்த மதமாக இருந்தாலும் அதில் வன்முறை இருக்கக் கூடாது என்று சொன்னவர், இந்து மதத்திலும் தீவிரவாதம் இருப்பதாக கூறி வருகிறார். மணிரத்னம் வீட்டில் வைத்த குண்டு வெடிக்கவில்லை, ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் பிரச்னை என்றதும் கும்பிட்டு விழுந்து 16 கட்ஸ் ஒப்பு கொண்ட தைரியமில்லாத நபர் கமல்ஹாசன். அவர், போய் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். .
மேலும் அவர், P. ஜெயினுலாபுதீனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் 20 வருடத்திற்கு விஸ்வரூபம் 2 வராது என்றும் உலகநாயகன் விஸ்வரூபம் ரிலீஸின் போது நடுங்கிப் போயிருந்தார் என்று ஜெயினுலாபுதீன் கூறியுள்ளதாகவும் கருத்து தெரிவித்ததுடன் கோழை சொல்வதற்கு கவலை வேண்டாம் என்று கமல்ஹாசனை கேலி செய்துள்ளார். இதனையடுத்து அவரை இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.