தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் நாளை மாலை நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடக்கிறது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றே தூத்துக்குடி வந்த சீமான் இரண்டாவது நாளாக இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தமிழகத்தில் இனி கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க வேண்டாம். அருகில் எங்கு விஷசாராயம் கிடைக்கிறது என்று பார்த்து குடித்தால் போதும் கஷ்டமும் தீர்ந்துவிடும் வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைத்து விடும். நான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவேன் என்று ராகுல் காந்தி சொல்லவில்லை. நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு வாழ்த்துக்கள் தான் சொல்கிறார். இந்தி பேசும் மாநிலங்கள் தான் இந்தியா என்பது பாஜகவின் நிலைப்பாடு. எல்லை தாண்டி வருவதாக தமிழக மீனவர்கள் மீது மட்டும்தான் இலங்கை துப்பாக்கி சூடு நடத்துகிறது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வில்லையா?. இலங்கைக்கு எல்லை தாண்டுகிறார்கள் என்பது பிரச்சினை அல்ல இனம் தான் பிரச்சினை.
டாஸ்மாக் விற்பனை பாதிக்கும் என்ற காரணத்தால் தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதிக்க வில்லை. அப்போது, விஷசாராயம் குடித்து இறந்தவர்கள் வீட்டிற்கு முதல்வர் சென்று 10 லட்சம் வழங்குகிறார். கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு ஏதாவது நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளதா? கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா? இராணுவத்தில் வீர மரணம் அடைந்த வீரர்கள் வீட்டிற்கு முதல்வர் சென்றாரா? தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி இல்லை என்கின்றனர். ஆனால் பேனா சின்னம் வைக்க எங்கிருந்து நிதி வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி என்பார்கள். ஆளுங்கட்சி ஆன பிறகு வெல்கம் மோடி என்பார்கள்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்பது நமது இலக்கு. தமிழகத்தில் கள் விற்க ஏன் அனுமதிக்கவில்லை? கள் விற்பனை செய்தால் டாஸ்மார்க் வியாபாரம் பாதிக்கும். மற்ற மாநிலங்களில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். காரணம் அவர்களுக்கு பிராந்தி தொழிற்சாலைகள் இல்லை. தமிழகத்தில் இனி கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க வேண்டாம். அருகில் எங்கு விஷசாராயம் கிடைக்கிறது என்று பார்த்து குடித்தால் போதும் கஷ்டமும் தீர்ந்துவிடும் வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைத்து விடும். நான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவேன் என்று ராகுல் காந்தி சொல்லவில்லை. நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு வாழ்த்துக்கள் தான் சொல்கிறார். இந்தி பேசும் மாநிலங்கள் தான் இந்தியா என்பது பாஜகவின் நிலைப்பாடு. எல்லை தாண்டி வருவதாக தமிழக மீனவர்கள் மீது மட்டும்தான் இலங்கை துப்பாக்கி சூடு நடத்துகிறது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வில்லையா?. இலங்கைக்கு எல்லை தாண்டுகிறார்கள் என்பது பிரச்சினை அல்ல இனம் தான் பிரச்சினை என்றார்.
மேலும் படிக்க - Karnataka முதலமைச்சர் யார்? கையைப் பிசையும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் பாஜக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ