உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார் இந்திரா பானர்ஜி!

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி, வினித் சரண் மற்றும் KM ஜோசப் ஆகியோருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா பதவி பிரமானம் செய்து வைத்தார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2018, 11:37 AM IST
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார் இந்திரா பானர்ஜி! title=

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி, வினித் சரண் மற்றும் KM ஜோசப் ஆகியோருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா பதவி பிரமானம் செய்து வைத்தார்!

இன்று பதவியேற்றுள்ள மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை சேர்த்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 பேர் கொண்ட பட்டியலை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ஆணை பிரப்பித்தார். இதனையடுத்து இன்று இந்த பட்டியலில் இடம்பெற்ற 3 நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்றத்தின் 8 வது பெண் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். 

18 MLA-க்கள் தகுதிநீக்கம், புதுச்சேரி நியமன MLA-க்கள் உட்பட வழக்குகளை விசாரித்து இரு வேறு தீர்ப்புகளை அளித்தவர் இந்திரா பானர்ஜி.

இந்நிலையில் இவர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளதை அடுத்து தமிழக தலைவர்களின் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது!

Trending News