ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் IT RAID - எதற்காக ?

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 7, 2022, 11:48 AM IST
  • ‘ஆர்த்தி ஸ்கேன்’ - அதிரடி சோதனை
  • தமிழகம் முழுக்க இருக்கும் கிளைகளுக்கு செக்
  • 50 மேற்பட்ட அதிகாரிகள் திடீர் ரைடு
ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் IT RAID - எதற்காக ?  title=

உயர்தர மருத்துவ பகுப்பாய்வு படம் எடுத்தல் மையமான ‘ஆர்த்தி ஸ்கேன்’ பல்வேறு மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி இயங்கி வருகிறது. மேலும், டாட்டா கேப்பிட்டல் குரூப் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதற்கிடையே, ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

AARTHI SCANS,LABS,IT raid,income tax,ஆர்த்தி ஸ்கேன்,ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் ஐடி ரைடு

இதன் அடிப்படையில் சென்னையில் வடபழனி, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரக்கூடிய ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

AARTHI SCANS,LABS,IT raid,income tax,ஆர்த்தி ஸ்கேன்,ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் ஐடி ரைடு

இந்த சோதனையானது தொடர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகளின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில முக்கிய ஆவண குறிப்புகளின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொள்ளப்படுவதாகவும் வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க| விடுதலைக்கோரிய நளினியின் மனு ? - தீர்ப்பு தள்ளிவைப்பு

மேலும்,வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | நடிகர் விஜயின் படத்தை பார்க்காதீர்கள்: மதுரை ஆதினம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News