தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: MK.அழகிரி

ரஜினி கூறியதை போல தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்; அதை ரஜினி நிரப்புவார் என மு.க அழகிரி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Nov 14, 2019, 01:43 PM IST
    • தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்.
    • தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்.
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: MK.அழகிரி  title=

ரஜினி கூறியதை போல தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்; அதை ரஜினி நிரப்புவார் என மு.க அழகிரி தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மு.க. அழகிரி , "ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது உண்மை தான்" என்று தெரிவித்தார். சமீபகாலமாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியல் குறித்து பேட்டியளிக்க ஆர்வம் காட்டாத மு.க.அழகிரி இன்று சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என்றும், அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது எதுவும் கூற முடியாது என அவர் பதிலளித்துள்ளார். 

கடந்த நவம்பர் 8 தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்கள சந்திப்பில் கூறுகையில்; நான் எப்போது வெளிப்படையாகத்தான் பேசி வருகிறேன் என்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாகவும் கூறினார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி விட்டன. நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன் என்றார். இந்திய பொருளாதாரம் மந்தமாகதான் உள்ளது; அதை மீட்க  என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாகவும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

Trending News