எரிபொருளை சேமிக்கவும், பேலோட் திறனை அதிகரிக்கவும் தமிழ்நாட்டில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளம்..!
ISRO (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) நாட்டின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தமிழ்நாட்டின் குலசேகரபட்டினத்தில் நிறுவ உள்ளது. மேலும், இந்த ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளங்களை விட ஒரு மூலோபாய நன்மையைக் கொண்டிருக்கும். புதிய ஸ்பேஸ்போர்ட்டுடன், SSLV விண்கலங்களை நேரடியாக தென்துருவத்திற்கு ஏவ முடியும் என்பதால், வியூகரீதியான நன்மை கிடைக்கும் மற்றும் இலங்கையை சுற்றிச்செல்ல வேண்டிய எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள குலசேகரபட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதள மையத்திற்கான நிலம் கையகப்படுத்தல் நடந்து வருவதாகவும், இது முடிந்தபின் மேலும் பணிகளை தொடங்கும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்திருந்தார்.
இந்திய விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், விண்வெளித் துறையின் செயலாளராக இருக்கும் சிவன், பல தொடக்க நிறுவனங்கள் விண்வெளித் துறையில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்... ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தென்துருவத்திற்கு விண்கலங்களை ஏவும் போது, ராக்கெட் கழிவுகள் இலங்கை மண்ணில் விழுவதைத் தவிர்க்க, அத்தீவை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற எரிபொருள் செலவு ஏற்படுகிறது. பெரிய விண்கலங்கள் எனும்போது அதிக எரிபொருள் செலவு என்பது பிரச்சினையில்லை. ஆனால், சிறிய விண்கலங்கள் விஷயத்தில் இது சாத்தியமில்லை. ஆனால், குலசேகரப்பட்டிணம் எனும்போது, அங்கு பூகோள வசதி கிடைக்கிறது.
READ | வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...
இலங்கைத் தீவை சுற்றிச்செல்ல வேண்டியதில்லை. இதன்மூலம், கூடுதல் சுமையையும் இணைத்து அனுப்ப முடியும். அதேசமயம், விண்கல ஏவுதளம் என்று வருகையில், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும், குலசேகரப்பட்டிணத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளி நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழகம் 2019 டிசம்பரில் தொடங்கியது. விண்வெளி நிலையம் அமைப்பதற்காக மாதவன்குரிச்சி, படுகாபத்து மற்றும் பல்லகுரிச்சி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஒரு ராக்கெட் துறைமுகத்தை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்களை கொண்டுள்ளது.