2019-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது!
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு 23.01.2019 முதல் 24.01.2019 வரையிலான நாட்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம் எனவும் அரசு செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேலையில் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள்(Hall Ticket) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் எனவும், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் அரசு செய்திகுறிப்பில் குறிப்படப்பட்டுள்ளது.
குறிப்பு : இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.