தமிழகத்தில் 62 இடங்களை வருமான வரி சோதனை; ரூ.700 கோடி வரி ஏய்ப்பு...!!

தமிழகத்தில் 62 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2019, 01:17 PM IST
தமிழகத்தில் 62 இடங்களை வருமான வரி சோதனை; ரூ.700 கோடி வரி ஏய்ப்பு...!! title=

சென்னை: தமிழகத்தில் 62 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 62 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, மலிவான விலையில் பொருட்களை வாங்கி, மதுபானம் தயாரிப்பதில் அதிக செலவுகளைக் காட்டியும், தரமற்ற பொருட்களுக்கு அதிக அளவில் விலை நிர்ணியம் செய்வது போன்ற குளறுபடி மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் எஸ்.என்.ஜே குழுமம் கடந்த 6 ஆண்டுகளில் 400 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், தஜானூர், கேரளா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட 55 இடங்களில் எஸ்.என்.ஜே குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது, தமிழ்நாட்டின் மற்றொரு மதுபானக் குழுவும் இதேபோல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலுக்குப் பிறகு, சென்னை, காரைக்கல் உள்ளிட்ட 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தியது, இந்த சோதனையில், 300 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Trending News