10:30 AM 12/22/2021
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பாக்ஸ்கான் (Foxconn) தனியார் செல்போன் தொழிற்சாலை வரி ஏய்ப்பு தொடர்பாக, மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்.
சீன நிறுவனமான ஷியோமி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் (logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது, அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.
ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், பாக்ஸ்கான் (Foxconn) தனியார் செல்போன் தொழிற்சாலை வளாகத்தில் செயல்பட்டு வரும், மற்றொரு தனியார் தொழில்சாலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர், நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பாக்ஸ்கான் (Foxconn) தனியார் செல்போன் தொழிற்சாலை வரி ஏய்ப்பு தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை அடையாறில் உள்ள மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி விவகாரங்களை ஜான் பிரிட்டோவின் நிறுவனம் கவனித்து வருவதால், அதன் தொடர்ச்சியாக வருமானவரி சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ALSO READ | விஷமாக மாறிய உணவு, 10 மணிநேர போராட்டம் வாபஸ்: நடந்தது என்ன?
இதுவரை வருமான வரித்துறை சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், சோதனை முடிந்த பின்னர் வரி ஏய்ப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் அருகே நள்ளிரவு தொடங்கி 17 மணி நேரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | சென்னை-பெங்களூரு சாலையை ஸ்தம்பிக்க வைத்த 3 ஆயிரம் பெண்கள்: தொடரும் போராட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR