“அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்”-கமல்ஹாசன்

நடிகர் ரஜினியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல துறை நிபுணர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.

Last Updated : Mar 1, 2018, 03:58 PM IST
“அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்”-கமல்ஹாசன்  title=

நடிகர் கமல் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். நடிகர் கமல் ’வணக்கம்’ என தமிழில் தனது உரையை துவங்கிய கமல், “இந்தாண்டு அரசியல் பயணத்தை துவங்கும் நான், கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன். 

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போகிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் கிராமத்தை முன்னோடி கிராமங்களாக மாற்றுவோம். இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். ஆனால் பணத்திற்காக அல்ல. கருத்துக்காக. மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள். 

ஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், நம்மிடம் இருந்து அரசியல்வாதிகள் பணம் எடுக்கும்போது கேள்வி கேட்க முடியாது. பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்குள் வரவில்லை. ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தனர். தேர்தல் அரசியலை கடந்து, அவர்கள் இருவரும் எனது ஹீரோக்கள். 

தற்போது எந்த கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. அதனால்தான் கட்சியில் இணையாமல், புதுக்கட்சியைத் தொடங்குகிறேன். திராவிடம் என்றால் இரு கட்சி சார்ந்தது என நினைக்கிறார்கள். திராவிடம் என்பது தேசியம் சார்ந்தது. 

நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் நிச்சியம் காவியாக இருக்காது. எனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். 

நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்” என நடிகர் கமல் உரையாடியுள்ளார்.

Trending News