விஷத்தை திணிக்கும் மார்க் ஆண்டனி... படத்திற்கு தடை கோரும் திருநங்கை - முழு விவரம்!

Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் என திருநங்கை ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அப்படத்திற்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 19, 2023, 06:30 PM IST
  • மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது.
  • எஸ்.ஜ. சூர்யா, விஷால் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
  • இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
விஷத்தை திணிக்கும் மார்க் ஆண்டனி... படத்திற்கு தடை கோரும் திருநங்கை - முழு விவரம்! title=

Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இருப்பினும் அந்த படத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள LGBTQ சமூகத்தினருக்கு எதிரான கருத்துகளுக்கு இயக்குநர் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

'திருந்துங்க டா டேய்...'

சமூக வலைதளங்களிலும் பல்வேறு கண்டன பதிவுகளை பார்க்க முடிகிறது. அதில் ராகுல் சுரேஷ்குமார் என்ற பேஸ்புக் பயனர் எழுதிய பதிவில்,"நான் மார்க் ஆண்டனியைப் பார்த்து மகிழ்ந்த போதும், இந்தப் படம் திருநங்களைகள், LGBTQ சமூகத்தினருக்கு எதிரான மற்றும் பெண் விரோத உள்ளடக்கத்தால் ஆழமான சிக்கலைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் புறக்கணிக்க முடியாது. இது 2023, இன்னும் எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு நட்சத்திரம் கேவலமான வகையில் "அவனா நீ ?" என தன்பாலின ஈர்ப்பாளராக கொடூரமான வகையில் காட்சிப்படுத்தப்பட்ட ஒய்.ஜி. மகேந்திரன் நடித்த கதாபாத்திரத்துடன் உரையாடுகிறார். 

மேலும் சில்க் ஸ்மிதா காட்சி முழுவதும் மிகவும் பாலியல் தொனியைக் கொண்டிருந்தது. மொத்த தியேட்டரும் கொண்டாடுகிறது. ஒரு பொதுபோக்குக்காக இதெல்லாம் தேவையா. இது நல்ல சந்தர்ப்பம், நீங்கள் LGBTQ மற்றும் பாலியல் உள்ளடக்கத்தை சாதாரணமாக விட்டுவிட்டு அதில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். எல்லாவற்றையும் விட சரியான பிரதிநிதித்துவம் முக்கியமானது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்,"திருந்துங்க டா, இல்லாட்டி திருந்த முயற்சி ஆச்சும் பண்ணுங்க டா டேய்" என இயக்குநரை கடுமையாக சாடியுள்ளார். 

மேலும் படிக்க | 'மார்க் ஆண்டனி' வசூல் விவரம்: வெளியான நான்கே நாட்களில் 50 கோடி கலெக்ஷன்

திருநங்கை மனு

இது ஒரு புறம் இருக்க, கோவையை சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில்,"சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி, நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்ஜே சூரியா ஆகியோர் நடிப்பில் 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. 

அந்த திரைப்படத்தில் திருநங்கைகள், LGBTQ சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட காட்சிகள் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும் நகைச்சுவையாகவும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது. 

இது போன்ற திரைப்படங்களினால்  திருநங்கைகளின் முன்னேற்றம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி இயக்குனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.

'உரிமையை முதலில் வழங்குங்கள்'

இது குறித்து ஜாஸ்மின் மதியழகன் கூறுகையில், "மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் பாலியல் உறவுக்காக அலைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள். நடிகர் ஒய்.ஜி மகேந்திரனையும் திருநங்கை போல் காட்டி எவ்வித Positive நிகழ்வையும் காட்டாமல் இருக்கின்றனர். மேலும் சில இடங்களில் ஆண்கள், திருநங்கைகள் போல் வேடமிட்டு விஷாலை கொலை செய்வதற்கு வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் தற்போது வரை திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இருந்து தான் வந்துள்ளது. பலரும் தங்களை படத்தை படமாக பாருங்கள் என கூறுகிறார்கள். எங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகள் உரிமைகளை வழங்கிவிட்டு இதனை கூறுங்கள்" என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | TTF வாசனை கைது செய்த காவல்துறை! பிணையிலும் வர முடியாது!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News