TN Board Class 10th, 12th Result 2024: தமிழகத்தில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் முடிந்தது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் தற்போது தங்களது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை ரிசல்ட் தேதிகளையும், மாணவர்கள் எப்படி ரிசல்டை பார்க்கலாம் என்ற தளங்களையும் வெளியிட்டிருக்கிறது.
தேர்வு முடிவுகளின் தேதி:
தமிழக பள்ளிக் கல்வித்துறை, இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைப்பெற்ற 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுக் முடிவுகளை விரைவில் வெளியிட இருக்கிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதலில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது. அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.
மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நடைப்பெற்றது. 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள், ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைப்பெற்றது. 11ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைப்பெற்றது.
தேர்வு எழுதியவர்கள்:
12ஆம் வகுப்பு தேர்வை, மொத்தம் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியதாக கூறப்படுகிறது. 11ஆம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் எழுதியதாகவும், 9 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியதாகவும் கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
தேர்வு எழுதியவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:
மேலும் படிக்க | பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்க..
>tnresults.nic.in இணையதளத்தை தேடவும்
>SSLC Exam Results May 2024 என்பதை அழுத்தவும்.
>உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும்.
>உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.
>உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்க..
>tnresults.nic.in or dge.tn.gov.in. என்ற இணையதள முகவரியை அணுகவும்
>அங்கு, TN HSC Result 2024 என்று எழுதியிருக்கும் இடத்தில் தட்டவும்.
>உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும், அதில், உங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
>உங்கள் தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் அதை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை பார்க்கும் தளங்கள்:
தேர்வு முடிவுகளை பார்க்க, ஒரு தளத்தில் சர்வர் பிரச்சனை இருந்தால் இன்னொரு தளத்திலும் பார்க்கலாம். அனைத்து தளங்களும் செயல்படும். அவை: tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in and dge.tn.gov.in. ஆகியவை ஆகும். பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு, அவர்கள் பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கே தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு விடும்.
மேலும் படிக்க | காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ