தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கொருமுறை மாசிக்கொடை திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர்.
ALSO READ | அரசு மருத்துவமனையில் போதையில் மட்டையான மருத்துவர்
அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கு, குளிப்பதற்கு என கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பௌர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் இக்கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.
ALSO READ | ALSO READ | கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை
அங்கு சென்ற பெண் குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதை பார்த்துள்ளார். அதில் சந்தேகமடைந்து ஒயரை எடுத்து பார்த்தபோது, அது கேமிரா என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால், விஷயம் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனக் கூறியுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த விளாத்திக்குளம் காவல்துறையினர் கோவிலுக்கு சென்று குளியலறையில் சோதனையிட்டபோது மேலும் 2 ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர். சார்ஜருடன் இருக்கும் கேமராவை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பல மாதங்களாக ரகசிய கேமராக்கள் மூலம் பெண்கள் குளிப்பது படம்பிடிக்கப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள கோவில் நிர்வாகத்தினர், தங்களுக்கு பிடிக்காதவர்கள் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR