நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்திருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பெண்களை வீடியோ எடுத்த ஊழியர்..
ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சாஹத் தனது மனைவியுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார், அப்போது அவர்கள் தங்கியுள்ள அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலிசார் நடத்திய விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தது அந்த விடுதியில் பணிபுரியும் ஒரு ஊழியர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கேமரா பொறுத்திய குற்றத்திற்காக விடுதி ஊழியர் சிண்டு என்ற 22 வயது இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். பின்னர் அந்த இளைஞர் கூடலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட்டார்.
மேலும் படிக்க | குப்பை கொட்டுவதில் வந்த பிரச்சனை! இளைஞர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய தம்பதி!
மசினகுடி பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்லும் நிலையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி..?
பெண்கள் விடுதி, தங்கும் விடுதி என பல இடங்களில் ரகசிய கேமராக்கள் வைத்து ஜோடிகளை (குறிப்பாக பெண்களை) படம் பிடிக்கும் அவலங்கள் நடந்து வருகின்றன. இவற்றை தவிர்க்க சில வழிமுறைகளை பயன்படுத்தலாம். நீங்கள் தங்கும் விடுதிக்குள் தனிப்பட்ட விஷயங்களை செய்யும் முன்பு இதையெல்லாம் பின்பற்ற வேண்டும்.
ஹோட்டல் அறையை ஆராய்தல்:
தங்க இருக்கும் அறையை கண்களாலேயே நோட்டமிட வேண்டும். விளக்கு அல்லது ஷவரின் துளைகள் ஆகியவை மீது சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை அருகில் சென்று ஆராயலாம்.
போன் டார்ச்லைட் உபயோகித்தல்:
துவாரம் போன்ற பகுதிகளில்தான் பெரும்பாலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். கேமரா லென்ஸ்கள் அதன் மீது படும் ஒளியை பிரதிபலிக்கும். அதனால், துவாரம் போன்று இருக்கும் பகுதிகளில் போனில் உள்ள டார்ச்லைட்டை உபயோகிக்கலாம். அந்த ஒளி பிரதிபலித்தால் சந்தேகித்தது போல ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
செயலிகளை உபயோகிக்கலாம்:
கேமராக்களை கண்டுபிடிப்பதற்கென சில செயலிகள் இருக்கின்றன. இவற்றை பதிவிறக்கம் செய்து அறையின் மூலை முடுக்குகள் மற்றும் துவாரங்களில் கொண்டு சென்று ஸ்கேன் செய்யலாம். RF Detector, Fing Hidden Camera Detector மற்றும் Glint Finder போன்றவை அந்த செயலிகளுள் ஒன்று.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ