முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு பதில்களை நோக்கி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அந்தவகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடைப்பெற்றுள்ளது.
Chennai: Tamil Nadu Health minister C. Vijayabaskar arrives to appear before Arumughaswamy Commission of Inquiry, which is inquiring the death of former Tamil Nadu CM Jayalalitha. pic.twitter.com/2Yte5zISon
— ANI (@ANI) January 21, 2019
இதனைதொடர்ந்து கடந்த மாதம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை பின்னர் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையம் விஜயபாஸ்கருக்கு 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அதன் பின்னர் தற்போது 4-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
அதனை ஏற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.