கஞ்சா, குட்கா விற்றால் குண்டர் சட்டம்; ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 அம்சங்கள்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 01:20 PM IST
  • 28.03.200 முதல் 27.04.2022 வரை ஒரு மாதம் 'ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0'
  • கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை
  • வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி ரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும்
கஞ்சா, குட்கா விற்றால் குண்டர் சட்டம்; ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 அம்சங்கள்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை  title=

கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனைத்து மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ள உத்தரவு:

* கடந்த டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக இம்மாதம் 28.03.200 முதல் 27.04.2022 வரை ஒரு மாதம் 'ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்தப்பட வேண்டும். 

* பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு அருகே, கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

* கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், பதுக்கல் விற்பனைச் சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

* கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். 

மேலும் படிக்க |  ஸ்டாலின் கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார்; சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

* பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர்  வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி ரகசியத் தகவல் சேகரிக்க வேண்டும். 

* ஆந்திர மாநில கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீஸாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை தடுப்புப் பிரிவு முன்னிறு செயல்படுத்த வேண்டும். 

* ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். 

* காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்களுக்கு கஞ்சா, குட்கா குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அளிக்க வேண்டும். 

* பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க தனிப்படை அமைத்துக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டும். 

* இந்தப் பணியைக் கூடுதல் காவல் இயக்குநர், சட்டம்- ஒழுங்கு தினமும் கண்காணித்து மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும். 

* சென்னை மாநகர/ஆவடி மாநகர / தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர்கள் நேரடியாக இந்தப் பணியில் கவனம் செலுத்தி தங்கள் அறிக்கையை அனுப்புதல் வேண்டும். 

இவ்வாறு டிஜிபி சைலேந்தி ராபு உத்தரவில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க |  முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு..பாஜக நிர்வாகி கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

Trending News