மாநகராட்சிகளாக தரம் உயரும் ஓசூர், நாகர்கோவில்; சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல்  செய்யப்படுகிறது....

Last Updated : Feb 13, 2019, 10:57 AM IST
மாநகராட்சிகளாக தரம் உயரும் ஓசூர், நாகர்கோவில்; சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!  title=

ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல்  செய்யப்படுகிறது....

சென்னை: ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயமாகிறது. ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் இன்று எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார். 

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார். 2013 ஆம் ஆண்டு தஞ்சையும், 2014ம் ஆண்டு திண்டுக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த, ஜனவரி 5 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை முழுக்கமுழுக்க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகுறித்த விஷயங்களையே பேசினேன்.திருவாரூர் தேர்தல் குறித்து பாஜகமாநில தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக பட்ஜெட்டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை நேற்று  காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்று மூன்றாவது நாள்  விவாதம் நடைபெறுகிறது.

 

ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய  மாநகராட்சிகளை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இன்று  ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.இதை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்கிறார்.

 

Trending News