சென்னை: கொரோனா வைரஸின் பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்களை நோய்த்தொற்றின் பிடியில் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அரசு, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, முழுமையான ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய முடிவுகளை அறிவித்தார்.
ALSO READ | முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்: மு.க.ஸ்டாலின்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிக்கடன் பெற முத்திரைத்தாள் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
ஆட்டோ, கார் போன்றா வாகனங்கள் சாலை வரி செலுத்த 3 மாத காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்கள் வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகின்றன.
கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் பெறப்பட்ட கடனுக்கான 5 சதவீத பின் முனை வட்டி மானியம் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read | Chennai: ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல்
சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை கட்டுவதற்கு காலநீட்டிப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும்.
இந்த மாதத்துடன் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டு கட்டணத்தொகையை செலுத்துவதற்கு காலநீட்டிப்பு வழங்கக்கோரி மத்திய அரசுக்கும், ஐ.ஆர்.டி.ஏ. அமைப்புக்கும் கோரிக்கை விடுக்கப்படும்
தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதனமானியம் 3 தவணைகளாக வழங்குவதற்கு பதிலாக, மாநில தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு ஒரே தவணையாக தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | MDMK: ஏழு தமிழர்களை விடுதலை செய்க! வைகோ வேண்டுகோள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR