கஜா புயல்: DMDK சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2018, 01:31 PM IST
கஜா புயல்: DMDK சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்!  title=

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்....

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர பலவேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதாவது: "நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும். இதற்க்கு மற்ற மாவட்டங்கள் அவரவர்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களான உணவு பொருட்கள் அரிசி, பிரெட், பால் பாக்கெட், குடிநீர், தென்னை கன்று, வாழை கன்று, குடம், சேலை, வேஷ்டி, போர்வை, துண்டு, கொசுபத்தி, முளுகுவர்த்தி போன்ற அத்தியாவசிய பொருட்களை பாதிகாபட்ட மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும்.  

மேலும், முதல் கட்டமாக திருவாரூர், நாகை, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாம் கட்டமாக தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து தேமுதிக சார்பில் நிவாரண உதவிப்பொருட்களை ஓரிரு நாட்களில் வழங்கப்படும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

Trending News