கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி....!

கருணாநிதியின் வீட்டிற்கு சென்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி...!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 08:24 AM IST
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி....! title=

கருணாநிதியின் வீட்டிற்கு சென்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி...!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு பிரணாப் முகர்ஜி சென்றார். அங்கு அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். அவர்களிடம் துக்கம் விசாரித்த பிரணாப் முகர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தவே தாம் வந்ததாக கூறினார்.

கருணாநிதியின் மரணத்தின் போது தம்மால் நேரில் வர முடியவில்லை என்ற அவர், தற்போது சென்னைக்கு வந்துள்ள தருணத்தில் துக்கம் விசாரித்ததாக தெரிவித்தார்.

 

Trending News