மதுரையில் ஆர்பி உதயக்குமார் கைது - பின்னணி இதுதான்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2023, 04:52 PM IST
  • ஆர்பி உதயகுமார் மதுரையில் கைது
  • பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
  • கலைந்து செல்லாததால் கைது நடவடிக்கை
மதுரையில் ஆர்பி உதயக்குமார் கைது - பின்னணி இதுதான் title=

மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்காக 58 கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி அப்பகுதிகளின் விவசாயிகளுடன் மதுரை ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் வந்திருந்தார். அவருடன் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தனர். அப்போது அதிமுக உறுப்பினர்களுடம் உதயக்குமார் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க | திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன?

கொட்டும் மழையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பேசும்போது, வழக்கமாக செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக பாசன விவசாயதிதற்காக மனு அளிக்க வந்துள்ளோம் என கூறினார். அதிமுகவினருடன் மனு அளிக்க சென்ற அவர், மாவட்ட ஆட்சியர் தங்களின் மனுக்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 

ஆனால், மாவட்ட ஆட்சியர் அதனை செய்யாததால் திடீரென தரையில் அமர்ந்து உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் அறிவுறுத்தியும் கலைந்து செல்லாததால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மாலை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரூ.4,500 கோடி மோசடி?' உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு vs அமலாக்கத்துறை - நாளை தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News