கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுக்கு எதிரான தங்கள் பாதுகாப்பை மக்கள் லேசாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பது, நகரத்தின் ஷாப்பிங் ஹப்களில் கூட்டம் அதிகரிப்பதிலிருந்து தெளிவாகிறது. இது பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தமிழக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இதனால் குறைந்துள்ள தொற்றின் பரவும் அள்வு மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது . இந்த ஷாப்பிங் அவசரத்தின் தாக்கம் நவம்பர் நடுப்பகுதியில் அறியப்படும், என்றார் அவர்.
ஓணம் பண்டிகை காரணமாக கேரளாவில் மக்கள் பல இடங்களுக்கு சென்றதால், அங்கு தொற்று அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை புறக்கணித்ததால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தொற்றின் அடுத்த சுற்று துவங்கியது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
வணிக நிறுவனங்கள், அரசு பேருந்து சேவை மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், தொற்று வீதத்தைக் குறைக்க அரசால் முடிந்தது. ஆனால் தீபாவளி ஷாப்பிங்கில் காட்டப்படும் அவசரம் ஒரு தீவிரமான கவலையாக உள்ளது. சென்னையின் வணிக வட்டங்களில் கடைக்காரர்கள் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார். தொற்றின் சங்கிலியை உடைப்பதில் மக்கள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
தற்போது, மாநிலத்தில் சுமார் 70 சதவீதம் பேர் முக்கவசங்களை அணிந்து கொள்கின்றனர். இருப்பினும், இதை புறக்கணிப்பவர்களும் பலர் உள்ளனர்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் COVID வார்டுகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் பிற பொது சுகாதார ஊழியர்கள் மீது கடும் அழுத்தம் உள்ளது. தொற்று மேலும் அதிகரித்தால், அவர்கள் மீதான அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.
நவம்பரில் இரண்டாவது அலை ஏற்படலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், COVID வீரர்களுக்கு நவம்பர் ஒரு முக்கியமான மாதமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இது பண்டிகை காலமாகவும் இருப்பதால், மக்கள் ஷாப்பிங் போகும் அவசரத்தில் இன்னும் நாம் தொற்றுக்கு மத்தியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட அதிகமான மக்கள் நடமாட்டமும், மழைக்காலமும் தொற்று அதிகமாகவும் வேகமாகவும் பரவ வழி வகுக்ககூடும்.
ALSO READ: COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR