மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக மரணத்தை விளைவிக்கும் வகையில் ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் (308) கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் TTF வாசனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், TTF வாசன் LLR லைசென்ஸை பயன்படுத்தி காரை இயக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.
மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற IDல் YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் மேலும் கூடுதலாக மரணத்தை விளைவிக்கும் வகையில் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்னையில் இருந்து கைது செய்யப்பட்டு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக TTF வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வாசனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தனக்கு திடீரென கண் வலிப்பதாக கூறிய நிலையில் மீண்டும் வாசனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே TTF வாசனுக்கு நீதிமன்றம் பைக் லைசென்சை ரத்து செய்த நிலையில் காருக்கான LLR லைசென்ஸை மட்டுமே பயன்படுத்தி காரை இயக்கி வந்தது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ