விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரணாபுரம், திருத்தங்கல், சிவகாசி தேவர் சிலை, சித்துராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த பரப்புரையின் பொழுது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பையன் செங்கல் மற்றும் முட்டையை தூக்கிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நீட் தேர்வு என பரப்புரை மேற்கொள்வதாகவும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கூறினார்.
மேலும், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியதாகவும், டாஸ்மாக கடையை குறைப்போம் என தெரிவித்த திமுக அரசு தெருவிற்கு நான்கு டாஸ்மார்க் கடை அமைத்து வருவதாகவும் தெரிவித்தார். நானும், எடப்பாடியாரும் 40 தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதை அடுத்து 40 தொகுதிகளையும் வென்ற பிறகு எடப்பாடியார் முதல்வர் அல்ல, நாட்டின் பிரதமராக எடப்பாடியார் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இப்பிரச்சார கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளான மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பிலிப் வாசு பகுதி கழக செயலாளர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சு. தமிழ்மணியை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழகத்தில் நிர்வாக திறனற்ற, திமுக அரசின் நடவடிக்கையால் போதை பொருள் நடமாட்டமும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன என்று கூறி இருந்தார். திருச்செங்கோடு அடுத்த வாலரைகேட் என்ற பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினாய் எடப்பாடி, திமுக ஆட்சியில் மக்கள் நலனை விடுத்து தங்கள் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கட்சியில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் நாட்டிற்கு ஒரு முதலமைச்சர் தான் தேவை திமுகவில் 4 முதலமைச்சர்கள் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் உதயநிதி துர்க்கா ஸ்டாலின்நான்கு முதலமைச்சர்கள்தமிழகத்தை அதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக ஆட்சி காலத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறதோ அந்த மாநிலம் பாதிக்கப்படும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதிமுக ஆட்சியில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் 2 ஆண்டு விடியா திமுக ஆட்சியில் 52 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. கட்டுமான பொருள் அத்தியாவசிய பொருட்கள விலை உயர்வுக்கு டீசல் விலை தான் காரணம். கம்பி விலை உயர்வு மணல் எம் சாண்ட் விலை உயர்வால் கனவில் தான் வீடு கட்ட முடியும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்த திமுக அதனை நிறைவேற்ற வில்லை என்று கூறி இருந்தார்.
மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ