OBC மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றம்

மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 26, 2020, 04:49 PM IST
OBC மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றம் title=

புதுடெல்லி: இந்த கல்வியாண்டில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தர விட முடியாது எனக்கூறி அதிமுக (AIADMK), திமுக (DMK) உட்பட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 50 சதவீதம் இடஒதுக்கீடு (Reservation) கோரி மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த மனுக்களை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

முன்னதாக இந்த ஆண்டு 50% ஓபிசி இடஒதுக்கீட்டை (OBC Quota) வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து ஆளும் அதிமுக மற்றும் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய இடங்களில் (AIQ) 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய மத்திய, மாநில அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலின் (Medical Colleges) பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்குமாறு உயர் நீதிமன்றம் ஜூலை 27 அன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது இந்த குழுவின் எந்தவொரு முடிவும் எதிர்கால கல்வி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும், தற்போதைய முடிவுக்கு அல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

ALSO READ | 

இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் நீட் விண்ணப்ப (Neet Application Form) படிவங்களை பூர்த்தி செய்துள்ளதால், மருத்துவ இருக்கைகளில் ஓபிசி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்க முடியாது என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் (TN Govt) சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. 

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News