ஜிகா வைரஸுக்கு அச்சம் அடைய வேண்டாம்: விஜயபாஸ்கர்

Last Updated : Jul 11, 2017, 11:14 AM IST
ஜிகா வைரஸுக்கு அச்சம் அடைய வேண்டாம்: விஜயபாஸ்கர் title=

ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. ஜிகா வைரஸ் உயிரைப் பறிக்கும் நோய் அல்ல. என்று மாநில சுகாதராத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 வயது வாலிபர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சட்டசபையில் தெரிவித்து இருந்தார். 

இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புனேயில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜிகா வைரஸ் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

அதே கிராமத்தில் மேலும் நான்கு பேரின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் ஜிகா வைரஸ் தாக்கம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் இன்று போட்டியளித்த அவர், ''ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கு யாரும் அச்சம் அடைய வேண்டியதில்லை. போதிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜிகா வைரசால் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.

Trending News