தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை துவக்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர்.
விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
கூறியுள்ளார்/
குட்கா விற்பனை செய்ய அனுமதி தந்ததில் லஞ்சம் பெற்றதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், குட்கா பிரச்சனையை நான் சட்டரீதியாக சந்திப்பேன், நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. ஜிகா வைரஸ் உயிரைப் பறிக்கும் நோய் அல்ல. என்று மாநில சுகாதராத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 வயது வாலிபர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சட்டசபையில் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புனேயில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜிகா வைரஸ் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கலப்படமில்லாத தரமான உணவு பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடந்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாக தகவல் பரவியதால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடியது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.
பணம் பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த 400 டோக்கன்கள் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பல கோடி மதிப்பு உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க-வின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல், தொற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.