காவிரி தொடர்பான அனைத்து முயற்சிக்கும் திமுக ஆதரவு: ஸ்டாலின்!

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் காவிரி தொடர்பான அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் திமுக முழு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார். 

Last Updated : Feb 22, 2018, 01:54 PM IST
காவிரி தொடர்பான அனைத்து முயற்சிக்கும் திமுக ஆதரவு: ஸ்டாலின்! title=

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அண்மையில் இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான பங்கை குறைத்து பெங்களுரு குடிநீர் தேவைக்காக அதனை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். 

அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க செயல்தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியபோது;  தமிழகத்தில் காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார். காவிரியை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் கர்நாடகாவின் சுயநலப்போக்கு இன்றுவரை மாறவில்லை. 

காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ள 16.2.2018-லிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களையும் முதல்வர் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து முதலில் “காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்” என்று வலியுறுத்த வேண்டும். என கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் இதற்கான தீர்ப்பை நாம் விரைவில் காணவேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Trending News