அசுர வேகத்தில் முடி உதிர்தலைத் தடுக்கும் மேஜிக் விதைகள்...தினமும்1 விதைச் சாப்பிட்டால் போதும்!

முடி உதிர்தலைத் தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கியமான விதைகள் சாப்பிட்டு உங்கள் கூந்தலை என்றும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உடலில் குறைவாக இருந்தால் நிச்சயம் முடி சேதாரம் ஏற்படும். உங்கள் முடியும் விரைவில் உதிர்ந்துவிடும். நீங்கள் தொடர்ந்து இந்த 7 விதைகளை வாரத்தில் உணவாகச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உங்கள் முடியை ஆரோக்கியமாக வளர்க்கலாம். 

1 /10

கடுகு விதைகள்: தாதுகள், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தலைக் கணிசமாகக் குறைக்கிறது.  

2 /10

சணல் விதைகள்: ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலை முடியை வலுப்படுத்தி ஆரோக்கியமான முடியை ஆதரிக்கிறது.

3 /10

பூசனி விதைகள்: இதில் துத்தநாகம் உள்ளன. ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் துத்தநாகம் சிறந்ததாகும். முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  

4 /10

சூரிய காந்தி விதைகள்: வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் நிறைந்துள்ளது. இது முடி உதிர்வைத் தடுத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறது.

5 /10

நைஜெல்லா விதைகள்: கருப்பு சீரக விதை என்று சொல்லப்படும் இந்த விதை உச்சந்தலை முடி சேதத்திலிருந்து சரிசெய்து தனித்துவமான முடி ஆரோக்கியத்தை அளிக்கிறது.  

6 /10

கொத்தமல்லி விதைகள்: அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புக்கு இந்த விதை நல்ல பெயர் பெற்றது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெற்றுத் தருகிறது.

7 /10

எள் விதைகள்: இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் காணப்படுகிறது. இவை முடி உதிர்வைத் தடுத்து ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்கிறது.  

8 /10

சியா விதைகள்: இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வீக்கம் மற்றும் வறட்சியைப் போக்கி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.

9 /10

ஆளி விதைகள்: இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  

10 /10

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)