மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிக்களுக்கும் இடைதேர்தல்?

தமிழகத்தில் கைவிடப்பட்ட மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது!

Last Updated : Mar 16, 2019, 01:38 PM IST
மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிக்களுக்கும் இடைதேர்தல்? title=

தமிழகத்தில் கைவிடப்பட்ட மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது!

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து ஒரே நாளில் தேர்தல் நடத்திட வேண்டுமென, இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு  திமுக கடிதம் எழுதியுள்ளது.

இக்கடிதத்தினை கடிதத்தை, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எம்.பி., - தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் - தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., ஆகியோர் புதுடெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து அளித்தனர்.

இதுகுறித்து தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கையில் "திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, தொடர்ந்து தள்ளிவைப்பது சட்டவிரோதமானது" 

திருப்பரங்குன்றம் தேர்தல் முறைகேடு தொடர்பாக, தான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று தி.மு.க-வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க-வினர் தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடி விலகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. நீதிமன்றம் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காத நிலையில் தேர்தல் ஆணையம் முன்வந்து தேர்தலை ஒத்திவைப்பது கண்டிக்கத்தக்கது. எனவே நாடாளுமன்றத் தேர்தலுடன்  21 சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்ததப்பட வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது.

எதிர்வரும் தேர்தலுக்கு கால நேரம் குறைவாக இருப்பதால் இதுதொடர்பான கடிதத்தினை நேரடியாக தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகம் ஆளும் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் எட்டுத் தொகுதிகள் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் எட்டுத் தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி கவனமாக இருக்கிறது. இந்த நிலையில்தான், மூன்று தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News