திமுக தலைவரை விமர்சிக்கும் அளவுக்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை: கனிமொழி பளிச்

ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் கூட ஒரு தகுதி வேண்டும் என டிடிவி தினகரன் குறித்து கேள்விக்கு கனிமொழி பதில்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2019, 03:59 PM IST
திமுக தலைவரை விமர்சிக்கும் அளவுக்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை: கனிமொழி பளிச் title=

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கண்டித்து நேற்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தனது கருத்துகளை ஆழமாக பதிவுச் செய்தார். 

நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். ஏனெனில் நான் பெரியார் மண்ணை சேர்ந்தவள், பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கருணை அடிப்படையில் அல்ல, அது அவர்களின் உரிமை. நாட்டில் பொருளாதார ரீதியில் நிகழும் புறக்கணிப்புகளை விட, சாதிய ரீதியிலான புறக்கணிப்புகள் அதிகமாக உள்ளன. நம் நாட்டில் உள்ள ஒரு சாபக்கேடு, சாதியை புறம்தள்ள ஒருவர் மதத்தினை மாற்றிக்கொண்டாலும் அவரை விடாமல் சாதி அடையாளம் பின்தொடரும் என்பது தான்" என பேசி அரங்கை அதிர வைத்தார். 

இந்தநிலையில், இன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் நிறைய கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தினகரன் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்க்கு பதில் அளித்த எம்.பி. கனிமொழி, 

"டிடிவி தினகரன் யார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் கூட ஒரு தகுதி வேண்டும். அதேபோல யாரை விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற ஒரு தகுதியும் உள்ளது. மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் அளவுக்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை என அதிரடியாக கூறினார்.

Trending News